இடுப்பில் உள்ள சதையை குறைக்க வேண்டுமா?
இடுப்பில் சதையை குறைக்க சில வழிகள். 1. கால்களை சேர்த்து வைத்து நேராக நின்று கொண்டு வலதுகையை இடுப்பில் வைத்து, இடதுகையை இடது தொடைக்கு வெளிப்புறம் வைத்து, கீழ் நோக்கி முடிந்தளவு கொண்டு செல்லலாம். அதேநேரம் வலதுகை, இடுப்பில் இருந்து மேல் நோக்கி கொண்டு செல்லலாம் இந்த நிலையில் முப்பது நொடி முதல் ஒரு நிமிடம் வரை செய்யலாம் இதே போல இடதுகையை இடுப்பில் வைத்து செய்யலாம். 2. கால்களை சேர்த்து வைத்து நேராக நின்று கொண்டு வலதுகையை வான் நோக்கி நீட்டி, இடதுகையை இடது தொடைக்கு வெளிப்புறம் வைத்து, கீழ் நோக்கி முடிந்தளவு கொண்டு செல்லலாம் இந்த நிலையில் முப்பது நொடி முதல் ஒரு நிமிடம் வரை செய்யலாம். இதே போல இடதுகையை வான் நோக்கி நீட்டி செய்யலாம். #CKS