தீராத வயிற்று வலியை தீர்க்கும் யோகாசனம்.
வயிற்று வலி ஒவ்வொருவரும் ஒரு விதமாக அனுபவித்திருப்பர். ஆங்கில மருத்துவம், கை மருத்துவம், பாட்டி வைத்தியம் என பல முறையில் வைத்தியம் கண்டிருப்பர். ஒரு சிலருக்கு என்ன வைத்தியம் பார்த்தாலும் தீராது, தற்கொலை செய்தவர்கள் பலர் உண்டு. அவ்வப்போது செய்தித்தாளில் வருவதுண்டு. அப்படித்தான் ஒரு சினிமா தயாரிப்பாளர், பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்தவர், தமிழில் முதன்முதலாக சினிமாஸ்கோப் படத்தை தயாரித்தவர், வயிற்று வலியால் அவதியுற்று, எல்லா மருத்துவமும் பார்த்தார், பலனளிக்கவில்லை. ஆங்கில மருத்துவர்கள் அவர் ஆறு மாதம் தான் உயிரோடு இருப்பார் என நாள் குறித்தார்கள், அவருக்கு 45வயது, அப்போது மனம் நொந்த அவர் சென்னையை விட்டு சொந்த ஊர் போய்விட்டார். செய்வதறியாது சுற்றி திரிந்தார். ஒரு இடத்தை கண்டார். ஒரு பூங்காவில் சிலர் யோகாசனம் பயில்வதை கண்டார். தன் நிலையை விளக்கினார், யோகாசன குரு, அவர் நிலைக்கண்டு மனம் வருந்தி காப்பாற்றுகிறேன் என கூறினார். சூரியநமஸ்காரம் எனும் யோகாசனத்தை சொல்லி கொடுத்தார். தினமும் பயிற்சி எடுத்து ஒரு நாளைக்கு நூறு முறை செய்ய ஆரம்பித்தார் அதிகாலையில். மாற்றம் நிகழ்ந்தது. நாட்கள் செல்ல...