வாய் புண்ணா, இதோ மருந்து
வாய் புண் பலருக்கும் உண்டாகும் பிரச்சனை, காரணங்கள் பல உண்டு. உடல் சூடு, மிக குறைந்த அளவே நீர் அருந்துவது, அளவுக்கு மீறி மசாலா உணவுகளை உண்பது, மிக காரமான உணவுகளை உண்பது, தொடர்ந்து பிரயாணம் செய்வது, இன்னும் பல காரணங்கள். நிவாரணம் என்ன என்று பார்ப்போம். 1. கற்றாழை ஜெல்லை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சரியாகும். 2. இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீரில் ஊறவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடிக்க வாய் புண் சரியாகும். 3. நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் மாசிக்காய்(galnut) என்ற மருந்து காயை வாங்கி ஒரு சிறிய துண்டை சாப்பிட வாய் புண் சரியாகும். #CKS