சர்க்கரை நோயா? கவலை விடுங்கள்.
சர்க்கரை நோய், பிறந்த குழந்தை முதல் வயதாகி இறக்கின்ற பெரியவர் வரை அனைவருக்கும் வரும் நோய். உடற்பயிற்சி, யோகாசனம் செய்பவர்கள் இதற்கு விதிவிலக்கு, ஒரு சிலருக்கு வருவது உண்டு. ஆங்கில மருத்துவம், ஓமியோபதி, யுனானி, சித்தா, ஆயுர்வேதம் என பல மருத்துவ முறை உண்டு. ஒரு முறை நோய் வந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட்டு ஆகவேண்டும். நோய் வருவதற்கு பல காரணங்கள், உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் இருப்பது, பரம்பரை வழியாக வருவது என பல காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனால் முக்கியமான காரணம் அவரவர் மனக்குழப்பம் அதிகமாக சிந்திப்பது, வருந்துவது, மிக முக்கியமாக டென்ஷன் ஆவது. டென்ஷன் ஆவதே பெரும்பாலான நோய்க்கு காரணம், அதில் சர்க்கரை வியாதி முதல் இடம். நம் அன்றைய தமிழ் முன்னோர்கள் கடைபிடித்த பழக்கத்தை நாம் இன்று நாகரீகம் என்ற பெயரில் தவிர்க்கின்றோம். ஆம் தாம்பூலம் இடுவது என சொல்லப்படும் வெற்றிலை பாக்கு போடுவது. வெற்றிலை(betel leaf), சுண்ணாம்பு(little lime), பாக்கு( betel) மூன்றும் சேர்ந்த கலவை நம்மை சர்க்கரை நோயிலிருந்து தள்ளி வைக்கும். அந்தக்கால பல் இல்லாத கிழவி கூட சின்ன கை...