Posts

Showing posts with the label படுக்கை புண்

படுக்கை புண், எமது அனுபவத்தில் ஒரு புதுத்தீர்வு.

படுக்கை புண், என்பது நோயில் விழுந்து படுக்கையில் எழ முடியாமல் இருக்கும் வயதானவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய கொடுமை. சிலருக்கு சரியாகிறது மருத்துவத்தில், சிலருக்கு சரியாகாமல் அவதியை உண்டாக்குகிறது. குடும்பத்தாருக்கும் கஷ்டப்படும் பெரியவர்களை பார்க்கும் போது மனம் வேதனைப்படும். பெரும்பாலும் அசையாமல்,  திரும்பமுடியாமல் இருப்பவர்களுக்கு பின் பிட்டம், அல்லது உட்காரும் இடம்  என்று சொல்லும் இடத்தில், காற்று புக முடியாத நிலை ஏற்பட்டு, அழுத்தத்தினால் சிவந்து, அவ்விடத்தில் தோல் கறுத்து பின் தோல் கிழிய ஆரம்பித்து புண் உண்டாகும். கவனிக்காமல் விட்டால் இரத்தமும் நீரும் வடிய தொடங்கி சீலும்(pus) பிடிக்க ஆரம்பிக்கும். பணம் வசதியுள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியும் அல்லது வீட்டில் செவிலியர் வைத்தும் மருத்துவம் பார்ப்பார்கள். வசதியில்லாதவர்கள் சற்று சிரமப்படுவர், நோயுற்றுவர் மிகவும் அவதியுறுவர், உறவினரும் மனம் நெளிவர் புண் கண்டு.  எமது பெற்றோருக்கு ஏற்பட்ட போது, சற்று சிரமப்பட்டோம் புண்ணை ஆற்ற, அப்போது தான் கடவுள் போல ஒருவர் அறிவுரை கூறினார், கண்ணுக்கு போடும் ஒரு ருபாய் டுயுப் மருந்தை வா...