இளமையை காக்கவும் முதுமையை தள்ளி போடவும்
இளமை அனைவரும் விரும்பும் ஒன்று, வயது அதிகமாக இளமை மறைந்து முதுமை தோற்றம் ஏற்படும். அதிகாலை சூரியன் உதயத்திற்கு முன்பு விழிப்பவர்கள் என்றும் இளமையாக இருப்பர். யோகாசனம் செய்பவரும் இளமையாக இருப்பர். மனம் குழப்பம் ஆகாமல், டென்ஷன் ஆகாமல் இருப்பவர்களும் இளமையை தக்க வைப்பர். நன்றாக நீர் அருந்துபவரும் இளமையாக இருப்பர். இயற்கை அளித்த ஒரு வரப்பிரசாதம், குமரிப்பெண் என்ற கற்றாழை(aloe vera). காலை வெறும் வயிற்றில் அல்லது உணவு உண்டபின் கூட கற்றாழை(aloe vera) சாப்பிடலாம். கற்றாழையை எடுத்து தோல் சீவி முள்களை நீக்கி உள்ளே ஜெல் மற்றும் நொங்கு போல இருக்கும், அதை அப்படியே உண்ணலாம். ஒரு சிலர் அதை கழுவியும் சாப்பிடுவர்,மோருடன்(butter milk) சேர்த்தும் சாப்பிடுவர். ஆனால் ஜெல்லை அப்படியே கழுவாமல் சாப்பிட்டால் பலன் அதிகம். உடல் சூட்டை குறைக்கும், தலைக்கு தேய்த்து பின் குளித்தால் உடல் குளிர்ச்சி ஆகும், தலைமுடியும் வளரும். சர்க்கரை வியாதியை குறைக்கும். நம்மை என்றும் இளமையுடன் வைத்திருக்கும் கற்றாழை(aloe vera). #CKS