Posts

Showing posts with the label முழங்கால் மூட்டு வலி 1.0

முழங்கால் மூட்டு வலியா?மருந்து உங்களிடத்தில்.

முழங்கால் மூட்டு வலி ஒரு மிக பெரிய பிரச்சினை அனைத்து வயதினருக்கும். மாடிப்படி, பஸ் ஏற முடியாது  மூட்டு வலி உயிர் போகும் பலருக்கும். இந்த முழங்கால் மூட்டு வலியால் அடியேனும் மிகவும் அவதியுற்றேன், என்னுடைய 29 வது வயதில் மாடிப்படி ஏற சிரமப்பட்டேன். 42 வது வயதில் வலி அதிகமாகி மாடிப்படி ஏறுவது பெரும் சோதனையாக தெரிந்தது. எம்முடைய ஆன்மீக குருநாதரிடம் வலியை பற்றி கூறினேன். அவர் வினவினார் எப்படி சாப்பிடுவாய் என, காலையில் இரண்டு தோசை, மதியம் நன்றாக சாப்பாடு, இரவு ஐந்து தோசை என்றேன். வலி வந்ததுக்கு காரணமே நீ தான் என்றார் குருநாதர். எப்படி என நான் கேட்க, விளக்கம் அளித்தார்.  ஒரு பாத்திரத்தில் பாதி மட்டும் தண்ணீர் ஊற்றினால் என்ன ஆகும், மீதி பகுதி காற்றால் நிரம்பும், அதே போல இரண்டு தோசை சாப்பிட்டால், வயிற்றில் மீதி இடம் தண்ணீர் போக காற்றால் நிரம்பும். அந்த காற்று வாயுவாக மாறி கிழே இறங்கி முழங்கால் மூட்டில் வந்து நிற்கும், போவதற்கு இடம் அறியாது அங்கயே இருந்து வலி உண்டாகும், அது தான் முழங்கால் மூட்டு வலி. வயிற்றுக்கு துரோகம் செய்யாமல் நன்றாக உண்டு நன்கு வேலை செய்தால், மூட்டு வலி பறந்து போகும் ...