Posts

Showing posts with the label கழுத்துவலி தலைவலி

கழுத்து வலியா? தலை வலியா? சில நிமிடங்களில் நிவாரணம் பைசா செலவில்லாமல்.

கழுத்து வலி நடுவயதுக்கு மேல் ஒரு சிலருக்கு வரும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு கழுத்து குனிந்து இருப்பதால் வலிக்கும், அதற்கு அவர்கள் அவ்வப்போது  நிமிர்ந்து அண்ணாந்து மேலே பார்த்தால் சரி ஆகி விடும், தலையை ஒரு சுற்று சுற்றினால் சரியாகிவிடும். பல காரணங்கள் சொல்லப்படுகிறது கழுத்து வலிக்கு. ஒரு சில கழுத்து வலிக்கு தைலம் தடவுவதும் உண்டு மருந்து மாத்திரை சாப்பிடுவதும் உண்டு. சிலர் கழுத்து வலியால் அவதியுற்று கழுத்து பெல்ட் போடுவதும் உண்டு.  பெரும்பாலும் தூங்கி எழும்போது கழுத்து வலிக்கும். அதற்கு தலையணையும் ஒரு காரணம் சில நாட்கள் என்ன செய்தாலும் என்ன மருந்து சாப்பிட்டாலும் கழுத்து வலி சரியாகாது, அதற்கு முக்கிய காரணம் ஒன்று தலையில் ஏறிய சூடு. இன்னொன்று வாயு, வயிற்றில் உள்ள வாய்வை வெள்ளைப்பூண்டு சாப்பிட சரியாகும், கொஞ்சம் வெந்தயம் சாப்பிட்டு தண்ணிர் குடிக்கலாம்.  ஆனால் தலையில் ஏறிய சூடு தலைவலியும், கழுத்து வலியும் கொடுத்து பாடாய்படுத்தும். இதற்கு நிவாரணமாக ஒரு எளிய வழி உண்டு. ஒரு சிறிய குச்சி, அல்லது கைக்குட்டை(kerchief) இவற்றின் நுனியை கொண்டு மூக்கில் நுழைத்து லேசாக உள்பகுதியில்...