தூக்கத்தில் முழங்கால் பின்பக்கம் நரம்பு இழுக்கிறதா?
நன்றாக ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, முழங்கால் பின்பக்கம் நரம்பு பிடித்து இழுக்க, வலி பயங்கரமாக எடுக்கும். நரம்பு பிடிப்பு விடுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டும். வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் வரும் பிரச்சனை இது. நரம்பு பிடிப்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும். இதற்கு எளிய தீர்வு : குப்புறப்படுத்து(free fall sleep) படுத்துக்கொண்டு, நம் இரண்டுகைகளின் முழங்கையும் தரையில் ஊன்றி, உள்ளங்கைகளால் தாடை அல்லது முகத்தை தாங்கி கொண்டு, வலது குதிக்காலை வலதுபக்கம் பிட்டம் மேல் கொண்டு வந்து முட்ட வைத்து பின் நீட்ட வேண்டும். அதே போல் இடது காலிலும் செய்ய வேண்டும். இருக்கால்களையும் மாறி மாறி மடக்கி நீட்ட வேண்டும் பலமுறை. இதை தினமும் செய்தால் தூக்கத்தில் முழங்கால் பின்பக்கம் நரம்பு பிடித்து இழுக்காது. #CKS