சாப்பிடும் போது நெஞ்சடைத்தால்(choking while eating) என்ன பண்ணுவது?
சாப்பிடும் போது திடீர் என்று நெஞ்சடைப்பது(choking), ஒரு சிலருக்கு வரும். வயதானவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர், அதிலும் நோயுற்றுவர்கள், அவதி சொல்லி மாளாது. இதற்கு உடனடி நிவாரணம்: பாதிக்கப்பட்டவரின் நெஞ்சை நன்றாக நீவிவிட வேண்டும், முக்கியமாக நெஞ்சின்நடுபகுதியை, கொஞ்சம் நம் உள்ளங்கையால் மெதுவாக தட்ட வேண்டும், அவர்களை கொஞ்சம் அண்ணாந்து மேலே பார்க்க சொல்லவேண்டும். அப்படியே முதுகு பக்கம், முதுகு தண்டில், கழுத்து பின்புறத்தில் இருந்து இடுப்பு வரை தட்டி, முதுகு முழுவதும் தட்ட வேண்டும். கொஞ்சம் விரைந்து வேகமாக செய்ய பாதிக்கப்பட்டவர் அவஸ்தையில் இருந்து விடுபடுவார். #CKS