தீராத வயிற்று வலியை தீர்க்கும் யோகாசனம்.

வயிற்று வலி ஒவ்வொருவரும் ஒரு விதமாக அனுபவித்திருப்பர். ஆங்கில மருத்துவம், கை மருத்துவம், பாட்டி வைத்தியம் என பல முறையில் வைத்தியம் கண்டிருப்பர். ஒரு சிலருக்கு என்ன வைத்தியம் பார்த்தாலும் தீராது, தற்கொலை செய்தவர்கள் பலர் உண்டு. அவ்வப்போது செய்தித்தாளில் வருவதுண்டு.

அப்படித்தான் ஒரு சினிமா தயாரிப்பாளர், பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்தவர், தமிழில் முதன்முதலாக சினிமாஸ்கோப் படத்தை தயாரித்தவர், வயிற்று வலியால் அவதியுற்று, எல்லா மருத்துவமும் பார்த்தார், பலனளிக்கவில்லை. ஆங்கில மருத்துவர்கள் அவர் ஆறு மாதம் தான் உயிரோடு இருப்பார் என நாள் குறித்தார்கள், அவருக்கு 45வயது, அப்போது மனம் நொந்த அவர் சென்னையை விட்டு சொந்த ஊர் போய்விட்டார்.

செய்வதறியாது சுற்றி திரிந்தார். ஒரு இடத்தை கண்டார். ஒரு  பூங்காவில் சிலர் யோகாசனம் பயில்வதை கண்டார். தன் நிலையை விளக்கினார், யோகாசன குரு, அவர் நிலைக்கண்டு மனம் வருந்தி காப்பாற்றுகிறேன் என கூறினார். சூரியநமஸ்காரம் எனும் யோகாசனத்தை சொல்லி கொடுத்தார். தினமும் பயிற்சி எடுத்து ஒரு நாளைக்கு நூறு முறை செய்ய ஆரம்பித்தார் அதிகாலையில். மாற்றம் நிகழ்ந்தது. நாட்கள் செல்ல செல்ல அவர் குணம் அடைந்தார் பின்னர் அந்த யோகாசாலையின் ஆசிரியர் ஆனார். அனைவருக்கும் இலவசமாக சொல்லி கொடுத்தார். பலரை உருவாக்கினார். அவர் ஆறு மாதத்தில் இறந்துவிடுவார்  என்று சொன்ன மருத்துவர்கள் இறைவனடி சேர்ந்தனர். அவர் சரித்திரம் படைத்தார், நோயை வென்றார், 94 வயது வரை வாழ்ந்தார். அவரை சாவின் விளிம்பில் இருந்து காப்பாற்றியது சூரியநமஸ்காரம்.
 
இன்றும் சாட்சியாக அந்த யோகாசன மையம் கோயம்புத்தூர் மாநகர மத்தியில் உள்ள பூங்கா வளாகத்தில் செயல்படுகிறது இலவசமாக. 
# CKS

Comments

Post a Comment