அதிகமான இருமலா?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி பிடித்தால் இருமல் வர வாய்ப்புண்டு. அதே இருமல் தொடர்ச்சியாக வந்தால் பெரும் அவஸ்தை தான். சிறுகுழந்தைகள் மிகவும் அவஸ்தை படுவர் இருமல் வந்தால்.
இதற்கு தீர்வு கொரடு போடுவது:
இருமல் இருப்பவரின் பின்கழுத்தில், தலைக்கு கீழ்பகுதியில் இருந்து தோள் பட்டை வரை நமது கட்டைவிரலை இடதுபக்கமும் ஆட்காட்டிவிரலை வலது பக்கம் வைத்து லேசாக அழுத்தி கொரடு போடுவது போல மூன்று நான்கு முறை இழுக்க இருமல் நிற்கும்.
மற்ற தீர்வு:
கொஞ்சம் பச்சரிசி அஞ்சு அல்லது ஆறு மிளகு வாயில் போட்டு ஊறவைத்து சாப்பிடலாம்.
கல் உப்பை சுடுதண்ணீரில் போட்டு வாய் கொப்பளிக்க சரியாகும்.
#CKS
Comments
Post a Comment