கடுமையான கழுத்து வலி
கடுமையான கழுத்து வலி வந்தால் மிகவும் சிரமமாக இருக்கும். தும்மல் போட்டும், வலி போகவில்லை என்றால், வேற வழி உள்ளது.
1. பாதிக்கப்பட்டவரின் பின்கழுத்தில், தலைக்கு கீழ்பகுதியில் இருந்து தோள் பட்டை வரை நமது கட்டைவிரலை இடதுபக்கமும் ஆட்காட்டிவிரலை வலது பக்கம் வைத்து லேசாக அழுத்தி கொரடு போடுவது போல மூன்று நான்கு முறை இழுக்க கழுத்து வலி சரியாகும்.
2. பாதிக்கப்பட்டவரின் பின்கழுத்தை, நன்கு நம் வலது அல்லது இடது கையால் உருவி(pull down) விடவேண்டும்.
அல்லது
பாதிக்கப்பட்டவரின் பின்கழுத்தில் நம் வலது அல்லது இடது கையை குறுக்காக வைத்து கீழ் நோக்கி இழுக்க வேண்டும்.
3. வாயிலும் மூக்கிலும் காற்றை கொஞ்சம் வேகமாக வெளியற்ற வேண்டும் ஒரு ஐந்து நிமிடத்திற்கு.
.
4. அமைதியாக தியானத்தில் உட்கார்ந்து கழுத்து வலி உள்ள இடத்தை மனக்கண்ணால் பார்த்து வலி கீழே இறங்கி போவதை போல நினைத்து பத்து நிமிடம் தியானத்தில் இருந்தால் கழுத்து வலி போய்விடும்.
குறிப்பு :
கழுத்து வலி வராமல் இருக்க இரவு உணவுக்கு பின் பதினைந்து நிமிடம் நடந்து விட்டு உறங்க போனால் கழுத்து வலி வராது.
#CKS
Comments
Post a Comment