இடுப்பு வலியா?
இடுப்பு வலி வர பல காரணங்கள் உண்டு. வீட்டில் இருந்தே எப்படி சரி செய்யலாம்.
இதற்கு எளிய தீர்வு:
1. சூடாக தண்ணீர் ஊற்றி, இடுப்பை சுற்றி, மேல் இருந்து கீழ் நோக்கி உருவினால் அல்லது தேய்த்துவிட சரியாகும்.
2. உடல் சூட்டினால் வலி என்றால் வேப்பெண்ணை தடவிவிட சரியாகும்
3. புங்கைமர(Indian beech tree) எண்ணை இரண்டு ஸ்பூன், திருமஞ்சனப்பொடி(Thirumanjanam powder) நாட்டு மருந்து கடையில் கிடைக்கும், அதில் இரண்டு சிட்டிகை(pinch), போட்டு கடாயில் வைத்து காய்ச்ச வேண்டும், மிதமான சூட்டில். கொதிக்க கூடாது. சூடு ஆறிய பின் எடுத்து, இடுப்பில் தடவலாம்.
4. மேலே சொன்னது சரியாகவில்லை என்றால், புங்கைமர(Indian beech tree) எண்ணை, திருமஞ்சனப்பொடி(Thirumanjanam powder) இவற்றுடன் இரண்டு பல்லு பூண்டு இடித்து போடவும், ஒரு வரமிளகாய்(red chilli) கிள்ளி போட்டு, இரண்டு கல் உப்பு சேர்த்து காய்ச்சி, இடுப்பில் போடவும்.
#CKS
Remedy not given ?
ReplyDeleteYes given .. thanks
ReplyDelete