உடல் கழிவுகளை வெளியேற்ற சித்தர்கள் காட்டிய வழி

உடல் கழிவு அனைவருக்கும் உள்ளது. உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா என பல முறையில் உடல்கழிவை வெளியேற்ற முடியும். வேறு சில வழிகளை பார்ப்போம். 

காலையில் வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் நீர் அருந்திவர கழிவு வெளியேறும். சுடுதண்ணீரும் குடிக்கலாம்.

சித்தர்கள் காட்டிய வழி:

காலையில் வெறும் வயிற்றில் மூச்சை அடக்க வேண்டும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு, குறைந்தது முப்பது விநாடி முதல் ஒரு நிமிடம் வரை. 

இன்னோரு முறை:

எட்டுவழி நடைபயிற்சி:
எண் எட்டை வரையவேண்டும் நீளத்தில் ஒன்பது அடியும், அகலத்தில் நாலரை அடியும் வரைந்து, அதன் மேல் வலது புறம் பத்து முறையும், இடது புறம் பத்து முறையும் நடக்க வேண்டும். 

மற்றொரு முறை:

சிறுகுறிஞ்சான்(cow plant), சிறியாநங்கை(kariyat), வெந்தயம், கற்றாழை(aloevera) இந்த நான்கு வகை மருந்து பொடிகளை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி ஒன்றாக கலக்கி காலையில் ஒரு ஸ்பூன் பொடியை ஒரு டம்ளர் நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இரவு உணவு உண்டபின்னும் குடிக்கலாம். கழிவுகள் நன்றாக வெளியேறும். சற்று உடல் தொய்வு தெரிந்தால் இந்த மருந்தை இரவில் தவிர்க்கலாம் 

முத்திரை( yoga mudra) :

சூரியமுத்திரை(Suryamudra), பயன்படுத்தியும் குறைக்கலாம் மோதிர விரலை, கட்டைவிரல் அடியில் வைத்து அதன் மேல் கட்டைவிரல் வைத்து லேசாக அழுத்தி, மற்ற மூன்று விரல்கள் நீட்டி பதினைந்து நிமிடம் இருக்கவேண்டும்

இன்னொன்று லிங்கமுத்திரை(linga mudra), அதுவும் பதினைந்து நிமிடம்.
#CKS

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?