தூக்கம் வராமல் கஷ்டமாக இருக்கா?
தூக்கம் வராமல் கஷ்டமா இருக்கா, கவலை விடுங்க.
நூறில் இருந்து பூஜ்யம் வரை கீழ் வரிசையில்(descending order) மனதில் எண்ண, தூக்கம் வரும்.
சும்மா சம்மணங்கால்(sitting in Cross leg) போட்டு தலையை தொங்க போட்டு உட்கார சில நிமிடங்களில் தூக்கம் வரும்.
வலது கை கட்டை விரல் நுணியும், நடுவிரல் நுணியும் தொட்டபடி முத்திரை போடவும். இடது கையிலும் முத்திரை போட்டு இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்ய, தூக்கம் வரும்.
தூக்கம் வர மிகவும் கஷ்டப்பட்டால், நாட்டு மருந்து கடையில் ஜாதிக்காய்(nutmeg) வாங்கி சின்னத்துண்டு வெட்டி, அதை தட்டி பாலில் கலந்து கொதிக்க வைத்து, ஆற வைத்து குடித்தால் தூக்கம் நன்றாக வரும். அடிக்கடி பயன்படுத்த கூடாது.
#CKS
Comments
Post a Comment