அதிகமான பேதியால் தொடை நடுக்கமா? தொடை வலியா?
பேதி ஒரு சில சமயங்களில் உடல் ஒவ்வாமையால், தொடர்ச்சியாக ஆகி மிகுந்த கஷ்டத்தை கொடுக்கும். எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டாலும் நிற்காமல் பல சிரமத்துக்கு பின் பேதி நின்றுவிடும்.
ஆனால் தொடர்ச்சியான பேதியால் உடம்பில் உள்ள சத்துக்கள் வெளியேறி, ஒரு சிலருக்கு எழுந்து நிற்கும் போது, நடக்கும் போது தொடை நடுக்கம் ஏற்படும், ஒருசிலருக்கு தொடைவலி ஏற்படும்.
இதற்கு எளிய தீர்வு :
1. சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
2. முளைகட்டிய பயறுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
3. முட்டையை வேகவைத்து வெள்ளை பகுதியை மட்டும் சாப்பிடலாம்.
4. கீரை வகைகள், தானிய உணவு வகைகளை சாப்பிடலாம்.
5. வெள்ளாட்டின் நெஞ்சு எலும்பு கறியை சூப்பு வைத்து குடிக்கலாம்.
6. மூன்று வேளையும் வயிறு ஏற்கும் அளவு நன்கு சாப்பிடவேண்டும்.
7. வெள்ளாட்டின் கால்களை சூப்பு வைத்து குடிக்கலாம்.
8. சாத்துக்குடி(mosambi) ஜுஸ் குடிக்கலாம்.
#CKS
Comments
Post a Comment