சுளுக்கு
கை அல்லது கால் சுளுக்கி விட்டால், வலி அதிகமாக இருக்கும்.
இதற்கு எளிய தீர்வு :
1. புங்கைமர(Indian beech tree) எண்ணை நாலு ஸ்பூன் திருமஞ்சனப்பொடி(Thirumanjanam powder) நாட்டு மருந்து கடையில் கிடைக்கும், அதில் இரண்டு சிட்டிகை(pinch), போட்டு கடாயில் வைத்து, அடுப்பை சிம்மில் வைத்து காய்ச்ச வேண்டும், மிதமான சூட்டில். கொதிக்க கூடாது. சூடு ஆறிய பின் எடுத்து, சுளுக்கிய இடத்தில் தடவலாம்.
2. மேலே சொன்னது சரியாகவில்லை என்றால், புங்கைமர(Indian beech tree) எண்ணை, திருமஞ்சனப்பொடி(Thirumanjanam powder) இவற்றுடன் இரண்டு பல்லு பூண்டு இடித்து போடவும், ஒரு வரமிளகாய்(red chilli) கிள்ளி போட்டு, இரண்டு கல் உப்பு சேர்த்து காய்ச்ச வேண்டும். சூடு ஆறிய பின் எடுத்து சுளுக்கிய இடத்தில் தடவலாம்.
3. சுளுக்கு சரியாகி, வீக்கம் குறையவில்லை என்றால் கருப்பட்டியை(jaggery) தண்ணீரில் கரைத்து அதனுடன் சுண்ணாம்பு கலந்து வீக்கத்தில் தடவினால் வீக்கம் குறையும்.
#CKS
Comments
Post a Comment