இடுப்பை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

இடுப்பை குறைக்க சில வழிகள் உண்டு.

1. இரண்டு கால்களுக்கு இடையில்  இரண்டடி இடைவெளிவிட்டு நின்றுகொண்டு, இரண்டு கைகளின் கட்டை விரல்களும் ஒன்றை ஒன்று நுனிகள் தொட்டபடி இருக்க, இடுப்பை இடமும் வலமும் திரும்பவேண்டும். தினமும் பத்து முறை இரண்டு பக்கமும் இந்த பயிற்சியை  செய்ய இடுப்பு குறையும்.
2. சுவற்றை விட்டு இரண்டு அடி தள்ளி நின்று கொண்டு இடது பக்கம் திரும்பி இரண்டு கைகளால் சுவற்றை தொட வேண்டும், அப்படியே வலது பக்கம் திரும்பி சுவற்றை தொட வேண்டும். இரண்டு பக்கத்துக்கும்  25 முறை செய்யலாம்.
3. இடுப்பில் கைகளை வைத்து இடுப்பை வலது பக்கம் சுற்ற வேண்டும், அப்படியே இடது பக்கமும் சுற்ற வேண்டும், அதாவது மாவு ஆட்டும் கிரைண்டர் போல சுற்ற வேண்டும் பத்து முறை செய்யலாம் இருபக்கமும்.
#CKS

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?