இடுப்பு அழகா இருக்கனுமா?
இடுப்பு அழகா இருக்க சில வழிகள் உண்டு.
1. இடுப்பில் கைகளை வைத்து, கால்களுக்கு இடையில் இரண்டடி இடைவெளி விட்டு, வலது பக்கமும் இடது பக்கமும் திரும்ப வேண்டும். 25 முறை இருபக்கமும் செய்யலாம்.
2. கைகளை கோர்த்து, வானம் நோக்கி உள்ளங்கைகளை உயர்த்தி, இரண்டு கால்களுக்கிடையில் இரண்டடி இடைவெளி விட்டு, வலது பக்கமும் இடது பக்கமும் திரும்ப வேண்டும், 25 முறை இருபக்கமும் செய்யலாம். கால்களை சேர்த்து வைத்தும் செய்யலாம்.
3. திரிகோணாசனம்(Thirikonasana).
கால்களை நன்கு அகட்டி வைத்து கொண்டு, இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி, அதன்பின் இடதுபக்கம் குனிந்து வலது உள்ளங்கையை இடது கால் பாதம் பக்கவாட்டில் வைத்து, இடது கையை வான் நோக்கி நீட்டி உள்ளங்கையை கண்கள் பார்க்க வேண்டும், இந்த நிலையில் முப்பது நொடி இருக்க வேண்டும். அதே போல வலது கால் பக்கம் செய்யவேண்டும்.
Comments
Post a Comment