இடுப்பு அளவை குறைக்கனுமா?
இடுப்பு அளவை குறைக்க சில பயிற்சிகள்.
1. சம்மணங்கால்(Crossed leg) போட்டு உட்கார்ந்து கொண்டு, இடது பக்கம் சாய்ந்து இடதுகை முழங்கையை தரையில் வைத்து உள்ளங்கையும் தரையை தொடுமாறு செய்யலாம். அதே போல வலது பக்கம் சாய்ந்து வலது கையில் செய்யலாம்.
2. சம்மணங்கால்(Crossed leg) போட்டு உட்கார்ந்து கொண்டு இடது பக்கம் சாய்ந்து இடதுகை முழங்கையை தரையில் வைத்து உள்ளங்கையும் தரையை தொடுமாறு செய்து, வலது கையை தலைமேல் கொண்டு வந்து இடது தோள்பட்டை வரை கொண்டு செல்லலாம். இதே போல வலதுபக்கம் செய்யலாம். இந்த நிலையில் முப்பது நொடி முதல் ஒரு நிமிடம் வரை செய்யலாம்.
3. இரண்டு கால்களையும் நீட்டி உட்கார்ந்து கொண்டு, ஒரு அடி இடைவெளி விடவேண்டும். இப்போது வலது கையால் இடது கால் கட்டைவிரலை பிடித்து கொண்டு, இடது பக்கம் நன்றாக திரும்பி இடது கையை தோள்பட்டை உயரத்தில் முன்னோக்கி நீட்ட வேண்டும். இதே போல வலதுபக்கம் செய்யலாம்.
இந்த நிலையில் முப்பது நொடி முதல் ஒரு நிமிடம் வரை இருக்கலாம்.
4. சுப்தவஜ்ராசனம்(Supthavajrasana) :
தரையில் உட்கார்ந்து இடது கால் முட்டியை மடக்கி பாதத்தை இடது பக்கவாட்டில் வைத்து, வலது காலை தூக்கி இடது தொடை மேல் வைத்து வலது கையை பின்பக்கம் கொண்டு வந்து வலது கால் கட்டைவிரலை பிடித்து, இடது கையால் வலது கால் முட்டியை பிடித்துகொண்டு இடது பக்கம் தலையை திரும்பி பார்க்கலாம். இதே போல வலது கால் முட்டியை மடக்கி செய்யலாம். முப்பது நொடி முதல் இரண்டு நிமிடம் வரை செய்யலாம்.
Comments
Post a Comment